அதிகரித்த வரவு..விலை குறைந்த தக்காளி..ரேஷன் கடையில் விநியோகம் நிறுத்தம்
அதிரடியான விலை உயர்வை அடைந்த தக்காளி தற்போது விலை குறைந்து வரும் நிலையில், ரேஷன் கடைகளில் அதன் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளில் தக்காளி
கடந்த ஜூலை மாத இறுதியில், திடீரென தக்காளியின் விலை அதிரடியாக உயர ஆரம்பித்தது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளியின் விலை 200 ரூபாயை எட்டிய நிலையில், பொதுமக்கள் கடும் அவதியுற்றனர்.
அதன் காரணமாக மலிவு விலையில் ரேஷன் கடைகளில், தக்காளி விநியோகத்தை தமிழக அரசு துவங்கியது. இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்த நிலையிலும், பெரும்பாலான கடைகளில் தக்காளி பெரிதாக கிடைக்கவில்லை என்றும் பலர் குறை கூறி வந்தனர்.
விலை குறைந்த தக்காளி
இந்நிலையில், தான் தற்போது தக்காளியின் விலை அதிரடியாக குறைய துவங்கியுள்ளது. சென்னை கோயம்னெடு மார்கெட்டிற்கு வரத்து அதிகரித்த காரணத்தால் தற்போது கிலோ ஒன்று 60 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
சில்லறை வணிகத்தில் கிலோ ஒன்று சென்னை புறநகர் பகுதிகளில் கிலோ ஒன்று 80 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. அதன் காரணமாக தற்போது ரேஷன் கடைகளில் தக்காளியின் விநோயோகம் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.