நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு: அவசர ஆலோசனையில்முதல்வர் நாராயணசாமி
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்களுடன் முதலமைச்சர் நாராயணசாமி இன்று அவரச ஆலோசனை நடத்துகிறார். புதுச்சேரியில் 4 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமாவை தொடர்ந்து முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. புதிய துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றுள்ள தமிழிசை சவுந்தரராஜன், நாளை பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதலமைச்சர் நாராயணசாமிக்கு உத்தரவிட்டிருந்தார்.

நாளை மாலை 5 மணிக்குள் வாக்கெடுப்பை நிறைவு செய்யவும், முழு நிகழ்வையும் வீடியோ பதிவு செய்யவும் ஆளுநர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்களுடன் முதலமைச்சர் நாராயணசாமி இன்று அவரச ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனையின் போது நாளை நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என கூறப்படுகிறது.
இதனிடையே, அனைத்து சட்டமன்ற உறுப்பினருக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்க காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
ஆளும் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி கூட்டணி என இரு கட்சிகளுக்கும் தலா 14 சட்டசபை உறுப்பினர்களை சமபலமாக கொண்டுள்ளது.
மேலும் நியமன எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு வாக்களிப்போம் என்றும் கூறியிருப்பதாக கூறப்படுகிறது.