நாளை தொடங்குகிறது IPL போட்டிகள் - சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் பலபரீட்சை..!
IPL2022
ஐபிஎல்2022
சென்னைசூப்பர்கிங்ஸ்
CSKVsKKR
KKRVsCSK
TomorrowStart
By Thahir
இந்த ஆண்டின் முதல் ஐபிஎல் போட்டி நாளை மும்மை வான்கடே மைதானத்தில் தொடங்குகிறது.
முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்,கொல்கத்தா நைட் ரைட்டர்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்தியாவில் கடந்த 2008 ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் போட்டிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதுவரை 14 ஐபிஎல் போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில்.இந்த வருடத்தின் 15வது ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 26 ஆம் தேதி துவங்கி மே மாதம் வரை நடைபெற உள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி,கடந்த தொடரின் ரன்னரான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.