நாளை விண்ணில் பாயும் ஜி.எஸ்.எல்.வி. எப்.10! இஸ்ரோ சொன்ன மகிழ்ச்சி செய்தி

gslv 10 rocket tomorrow launch
By Anupriyamkumaresan Aug 11, 2021 10:42 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in இந்தியா
Report

 ஜி.எஸ்.எல்.வி எப்.10 ராக்கெட் நாளை பூமி கண்காணிப்பு செயற்கை கோளுடன் விண்ணில் செலுத்தப்படுகிறது என்று விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இயற்கை பேரழிவுகள், விவசாயம், வானவியல், கணிதவியல், பேரிடர் வகைகள் ஆகியவற்றை அறிந்து கொள்வதற்காக ஈ.ஓ.எஸ்.3 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.

நாளை விண்ணில் பாயும் ஜி.எஸ்.எல்.வி. எப்.10! இஸ்ரோ சொன்ன மகிழ்ச்சி செய்தி | Tomorrow Rocket Gslv 10 Launch Isro Said

2.268 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோள் ஜி.எஸ்.எல்.வி எப்.10 என பெயரிடப்பட்டுள்ளது. இது ராக்கெட்டில் பொருத்தப்பட்டு நாளை அதிகாலை 5.43 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது என தெரிவித்தனர்.

இதையடுத்து விண்ணில் செலுத்துவதற்கான கவுண்டவுன் இன்று காலை 3.43 மணிக்கு துவங்கியது. கொரோனா காரணமாக தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்ததால், திட்டமிட்டபடி ராக்கெட்டுகளை இஸ்ரோ விண்ணில் செலுத்த முடியாத நிலை ஏற்பட்ட நிலை ஏற்பட்டது.

நாளை விண்ணில் பாயும் ஜி.எஸ்.எல்.வி. எப்.10! இஸ்ரோ சொன்ன மகிழ்ச்சி செய்தி | Tomorrow Rocket Gslv 10 Launch Isro Said

தற்போது கொரோனா தொற்று குறைந்து உள்ள காரணத்தினால் இந்த செயற்கைகோளை நாளை திட்டமிட்டப்படி விண்ணில் செலுத்த ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட இருக்கும் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் அதிநவீன, சுறுசுறுப்பான பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் ஆகும். இது பூமியின் மேற்பரப்பிலிருந்து 36000 கிலோ மீட்டர் தூரத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளது.