நாளை 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை - பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்பு!

Tamil nadu Weather Cyclone Rain
By Vinoja Oct 25, 2026 02:55 PM GMT
Report

தமிழ்நாட்டில் நாளை (அக்டோபர் 26) 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதனால் மழையின் தீவிரத்தைப் பொறுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை - பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்பு! | Tomorrow October 26 Will Schools Remain Closed

இன்று புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40–50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை முதல் அதி கனமழை வரை பெய்யக்கூடும்.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் நாளை காலை நிலவும் வானிலை மற்றும் மழையின் தீவிரத்தைப் பொறுத்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், நாளை விடுமுறை தொடர்பாக இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.