நாளை மாநாடு ரிலீஸ் இல்லை - ரசிகர்கள் ஏமாற்றம்: அதிர்ச்சி

Silambarasan Maanaadu Suresh Kamatchi
By Anupriyamkumaresan Nov 24, 2021 01:14 PM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in திரைப்படம்
Report

நாளை மாநாடு திரைப்படம் வெளியிடப்படாது என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிப்பில் உருவாகிவரும் படம் ‘மாநாடு’. இப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷின் நடிக்கிறார். சுரேஷ் காமாட்சி தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், பட வெளியீட்டிற்கான முன்னோட்டமாக படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டது.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த ட்ரைலர், யூடியூப் தளத்தில் தற்போது ஒரு கோடி பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துவருகிறது. இதற்கிடையே இப்படம் வரும் தீபாவளி தினத்தன்று வெளியாகவுள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில், இப்படம் வரும் நவம்பர் 25ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

நாளை மாநாடு ரிலீஸ் இல்லை - ரசிகர்கள் ஏமாற்றம்: அதிர்ச்சி | Tomorrow Manadu Movie Release Canceled Fansshocked

நாளை மாநாடு திரைப்படம் வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்து கொண்டிருந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர் நாளை படம் வெளியிடப்படாது என்றும், தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும், சிரமங்களுக்கு மன்னிக்கவும் என்று ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த அறிவிப்பால் ரசிகர்கள் வேதனையடைந்துள்ளனர்.