தமிழகத்தில் நாளை ரம்ஜான் பண்டிகை..!
Ramadan
By Thahir
தமிழகத்தில் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நாளை ரம்ஜான் பண்டிகை
இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்று ரமலான் எனும் ரம்ஜான் பண்டிகை.
ஒரு மாதம் இஸ்லாமியர்கள் அதிகாலை சாப்பிட்டு பகல் முழுவதும் தண்ணீர் கூட அருந்தாமல் நோன்பு இருந்து வருவார்கள்.
இறைவனுக்கு அஞ்சி பல இஸ்லாமியர் தர்மம் செய்து மசூதிகளில் அதிகளவில் வழிபாடுகளில் ஈடுபடுவர்.
இந்த நிலையில் இன்றுடன் ரமலான் மாதம் நிறைவடைந்ததால் நாளை தமிழகம், கேரளா, உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ரமலான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.