சென்னை மாவட்ட பள்ளி,கல்லுாரிகளுக்கு நாளை விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு!
புரட்டி போட்ட மிக்ஜாம் புயல்
வங்க கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை புரட்டி போட்டது. இந்த மழை பாதிப்பால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளை சுற்றி மழை நீர் தேங்கி இருப்பதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
உணவு, பால் உள்ளிட்ட பொருட்கள் கிடைக்காமல் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இதனையடுத்து தமிழக அரசு சார்பாக ஏற்கனவே இரண்டு நாட்கள் 4 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை
இதனையடுத்து இன்னும் பல்வேறு பகுதிகளில் வெள்ள பாதிப்பு குறையாத காரணத்தால் நாளையும் சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மிக்ஜாம்' புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் சென்னை, மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 4.12.2023 முதல் 6.12.2023 வரை தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்திருந்தது.
புயல் வெள்ளம் பாதித்த சில பகுதிகளில் நிவாரணப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மாணவர்கள் நலன் கருதி, நாளை (7.12.2023) சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (7.12.2023) விடுமுறை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு.#CMMKSTALIN | #TNDIPR | #CycloneMichaung@CMOTamilnadu @mkstalin@mp_saminathan pic.twitter.com/yNz9JcygwZ
— TN DIPR (@TNDIPRNEWS) December 6, 2023