நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - யாருக்கெல்லாம் பாதிப்பு?

tomorrow cyclone heavyrain
By Anupriyamkumaresan Nov 28, 2021 03:59 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in தமிழ்நாடு
Report

தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருவண்ணாமலை, கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 10 மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது.

நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - யாருக்கெல்லாம் பாதிப்பு? | Tomorrow Cyclone Heavy Rain In These Districts

அதேபோல, சென்னை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை உட்பட 21 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை தொடரும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

இதனிடையே தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தாழ்வு பகுதி உருவானதற்கு பிறகு 48 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வலுவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.