குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 : நாளை சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல்
M K Stalin
Government of Tamil Nadu
Palanivel Thiagarajan
By Thahir
நாளை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் 2023-24க்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
நாளை பட்ஜெட் தாக்கல்
2023-24க்கான நிதிநிலை அறிக்கையை நிதி மற்றும் மனிதவள வேளாண்மைத்துறை அமைச்சர் பிடி ஆர் பழனிவேல் தியாகராஜன் நாளை சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார்.
கடந்த 2021ஆம் ஆண்டில் திமுக ஆட்சியமைந்த பிறகு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்திருந்தார். இதனால் இது அவர் தாக்கல் செய்யும் 3-வது பட்ஜெட் ஆகும்.
இந்த பட்ஜெட்டில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.ரூ.1000 வழங்கும் திட்டம் குறித்து அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நாளை காலை 10 மணிக்கு சட்டப்பேரவையில் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.