திடீரென ரத்தான அதிமுக பொதுக்கூட்டம் - பின்னணியில் பிரதமரா..? அதிகார அறிவிப்பு..!
நாளை(19-10-2024) நடைபெறவிருந்த அதிமுகவின் பொதுக்கூட்டம் ரத்தாகியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்கூட்டம்
இது குறித்து அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கழக நிறுவனத் தலைவர், 'பாரத் ரத்னா' புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் 107-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு,
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி K. பழனிசாமி அவர்கள், 19.1.2024 அன்று, வட சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டம், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற இருந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புப் பேருரை ஆற்றுவார் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
தலைமைக் கழக அறிவிப்பு. pic.twitter.com/VcueZ3P3DP
— AIADMK (@AIADMKOfficial) January 18, 2024
இந்நிலையில், 19.1.2024 அன்று ஒத்திவைக்கப்பட்டு, 31.1.2024- புதன் கிழமை அன்று, டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில், கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் பங்கேற்று சிறப்புப் பேருரை ஆற்ற உள்ளார் என்பதைத் தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதமர் காரணமா..?
இந்த திடீர் தேதி மாற்றத்திற்கு காரணம், நாட்டின் பிரதமர் மோடி கேலோ விளையாட்டு போட்டிகளை துவங்கி வைக்க பிரதமர் மோடி, நாளை சென்னை வருகின்றார்.
இதற்காக, சென்னையில் பாதுகாப்பு மாற்றங்களை செய்யப்பட்டுள்ளன. அதனை கொண்டு தான், இந்த பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஒரே நேரத்தில் அதிமுக கூட்டம் மற்றும் பிரதமர் மோடியின் வருகை நடைபெற்றால், பாதுகாப்பில் கோளாறு நடைபெற்று விடும் என்ற காரணத்தினால் தான் இந்த மாறுதல் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Singappenne: ஆனந்திக்காக துணிந்த அன்பு.. விழிபிதுங்கி நிற்கும் கருணாகரன்- சூடுபிடிக்கும் கதைக்களம் Manithan

இலங்கையால் சமாளிக்கவே முடியாத ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி: சி.ஐ.டியிடம் வெளிப்படுத்திய மைத்திரி! IBC Tamil
