என்னது மறுபடியும் முதல்லேருந்தா - நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி

chennai tamilnadu cyclone
By Irumporai Nov 28, 2021 03:57 AM GMT
Report

தெற்கு அந்தமானில் நாளை உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழையும் முன்னிட்டு சென்னை பெருநகரில் வாகன போக்குவரத்தில் தற்போதைய நிலவரத்தின் படி, நீர் தேங்கி உள்ள சாலைகள் மற்றும் மழை நீர் பெருக்கு காரணமாக போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

குமரி கடல் மற்றும் அதனை ஒட்டி இலங்கை கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இன்று வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை , காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும், அரியலூர் ,பெரம்பலூர் ,கள்ளக்குறிச்சி ,சேலம் ,தர்மபுரி, திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும். என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தெற்கு அந்தமானில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகிறது . இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழை தொடரும் என்றும் நவம்பர் 30 முதல் டிசம்பர் 2 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் கன மழை நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.