தக்காளியை பதுக்கினால் நடவடிக்கை : அமைச்சர் பெரிய கருப்பன் எச்சரிக்கை
தக்காளியை பதுக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பெரிய கருப்பன் எச்சரித்துள்ளார்.
அதிகரிக்கும் தக்காளி விலை
கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த தக்காளி விலை இன்று 100 ரூபாயை எட்டியுள்ளது. அதன்படி, சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளின் வரத்து குறைவாக இருப்பதால் தக்காளி விலை ஒரு கிலோவிற்கு 100 ரூபாய் உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமைச்சர் எச்சரிக்கை
இந்நிலையில் தக்காளியை ஏற்றத்தை குறைக்கும் வகையில் சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் பெரியகருப்பன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தக்காளி விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த நுகர்வோருக்கு பசுமை பண்ணை கூட்டுறவு மூலம் தக்காளிகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், தக்காளிகளை கொள்முதல் விலைக்கே வழங்குவதற்கு, தமிழகத்தில் உள்ள 65 பசுமை பண்ணை காய்கறி அங்காடி மற்றும் நடமாடும் காய்கறி அங்காடி மூலம் நுகர்வோருக்கு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், தக்காளியை பதுக்குபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் பெரிய கருப்பன் எச்சரித்துள்ளார்.
தமிழகம் மட்டுமல்லாமல் பெங்களூரில் தக்காளி விலை கிலோ 100 ரூபாயை எட்டியுள்ளது