தக்காளி விலை உயர்வு - கிலோ ரூ.35க்கு விற்பனை..!
தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து, தினமும் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி லாரி, வேன் போன்ற வாகனங்களில் 600 டன் முதல் 700 டன் தக்காளி வருகிறது.
இந்நிலையில், கடந்த மாதம் ஒரு கிலோ நாட்டு தக்காளி ரூ.6க்கும், பெங்களூர் தக்காளி ஒரு கிலோ ரூ.8க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், சில நாட்களாக ஒரு கிலோ நாட்டு தக்காளி ரூ.30க்கும், ஒரு கிலோ பெங்களூர் தக்காளி ரூ.35க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதை மொத்த வியாபாரிகளிடம் இருந்து வாங்கிச் செல்லும் சில்லறை வியாபாரிகள், கிலோ ரூ.45 முதல் 50 வரை விலை வைத்து விற்று வருகின்றனர்.
இதற்கு காரணம், டீசல் விலை உயர்வு மற்றும் சென்னையின் பிற பகுதிகளில் இருந்து கோயம்பேட்டுக்கு வந்து வாங்கிச் செல்வதுதான் என்று சில்லறை வியாபாரிகள் கூறுகின்றனர்.
அதே சமயம் விவசாயிகளோ, தற்போது கடும் வெப்பம் காரணமாக தக்காளி செடிகள் வாடி வதங்க ஆரம்பித்துள்ளது.
அப்படியே விளைந்தாலும் உடனடியாக அதை உடனடியாக சந்தை படுத்த முடியவில்லை. மேலும் பல செடிகள் கருகிவிட்டது.
இதனால் குறைந்த அளவுதான் விளைகிறது. அதை அப்படியே மொத்த வியாபாரிகளிடம் விற்கிறோம் என்றனர்.