தக்காளி இல்லாமல் குழம்பு செய்வது எப்படி - கூகுளில் தேடும் பெண்கள்: விலை உயர்வால் தொடரும் அவலம்
தமிழகத்தில் தக்காளி விலை உயர்வால் குடும்ப பெண்கள் கூகுளில் தக்காளி இல்லாமல் குழம்பு செய்வது எப்படி என தேடி வருகின்றனர். தொடர் மழை காரணமாக தமிழகத்திற்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது.
இதனால் தக்காளியின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. சென்னையில் ஒரு கிலோ தக்காளி 150 ரூபாயிலிருந்து 170 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் தக்காளியை பெட்ரோல் விலையோடு ஒப்பிட்டு அதிர்ச்சியடைந்து வருகின்றனர். மேலும், பலர் மீம்ஸ்களை உருவாக்கி வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த இந்த 2 நாட்களில் ஏராளமான குடும்ப பெண்கள், தக்காளி இல்லாமல் குழம்பு செய்வது எப்படி என்று கூகுளில் தேடி வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.