தக்காளி விலை கிடு கிடு உயர்வு கிலோ ரூ.100 - இல்லத்தரசிகள் அதிர்ச்சி..!

Chennai
By Thahir May 19, 2022 05:02 AM GMT
Report

ஒரு கிலோ தக்காளி விலை 100 ரூபாயை நெருங்கியுள்ளதால் இல்லத்தரசிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக தக்காளி விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது.

தக்காளி விலை கிடு கிடு உயர்வு கிலோ ரூ.100 - இல்லத்தரசிகள் அதிர்ச்சி..! | Tomato Prices Rise Sharply To Rs 100 Per Kg

சென்னையில் கடந்த வாரம் ஒரு கிலோ நவீன் தக்காளி ரூ.45-க்கும் நாட்டு தக்காளி ரூ.38-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

ஆந்திரா,கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக தக்காளியின் வரத்து குறைந்துள்ளது.

தக்காளி விலை கிடு கிடு உயர்வு கிலோ ரூ.100 - இல்லத்தரசிகள் அதிர்ச்சி..! | Tomato Prices Rise Sharply To Rs 100 Per Kg

சென்னையின் தக்காளி தேவையை பூர்த்தி செய்ய கிருஷ்ணகிரி,ராயக்கோட்டை,கர்நாடகா,மற்றும் ஆந்திராவில் இருந்து தக்காளி வரத்து இருக்கும்.

சென்னையின் தினசரி தேவை 1000 டன்னாக இருந்து வரும் நிலையில் தற்போது தக்காளி வரத்து 500 டன்னாக குறைந்துள்ளது. இதனால் நாட்டு தக்காளி விலை கிலோ ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது.