Saturday, Jul 5, 2025

தக்காளி விலை தாறுமாறு..! சென்னையில் தக்காளி விலை மீண்டும் உயர்வு

Tomato Chennai
By Thahir 2 years ago
Report

சென்னையில் தக்காளி விலை மீண்டும் உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தக்காளி விலை உயர்வு 

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை அதிகபட்சமாக ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்டது.

Tomato prices rise again in Chennai

வெளி மார்க்கெட்டில் ரூ.180 வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரம் ஓரளவு விலை குறைந்து வந்தது. அதன்படி கடந்த 24-ந் தேதி சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.70 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது.

மீண்டும் உயர்வு 

பின்னர் மீண்டும் விலை உயர தொடங்கியது. கோயம்பேடு சந்தையில் நேற்று ஒரு கிலோ தக்காளி கிலோவுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.150க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று தக்காளி விலை கிலோவுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.160க்கு விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.