தக்காளி ஒரு கிலோ ரூ.200 க்கு விற்பனை - அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

Tomato Chennai
By Thahir Jul 31, 2023 03:06 AM GMT
Report

சென்னையில் தக்காளி விலை மீண்டும் உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

விலை கண்டு அதிரும் மக்கள் 

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை அதிகபட்சமாக ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்டது.

வெளி மார்க்கெட்டில் ரூ.180 வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரம் ஓரளவு விலை குறைந்து வந்தது. அதன்படி கடந்த 24-ந் தேதி சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.70 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது.

Tomato prices continue to rise in Koyambedu market

பின்னர் மீண்டும் விலை உயர தொடங்கியது. கோயம்பேடு சந்தையில் நேற்று ஒரு கிலோ தக்காளி கிலோவுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.150க்கு விற்பனை செய்யப்பட்டது.

கிலோ ரூ.200க்கு விற்பனை 

இந்த நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று தக்காளி விலை கிலோவுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.180க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சில்லறை வர்த்தக்கத்தில் தக்காளி விலை ஒரு கிலோ ரூ.200க்கு விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.