தொடர்ந்து சரியும் தக்காளி விலை - இன்னைக்கு எவ்வளோ தெரியுமா?
திடீரென உயர்ந்த தக்காளியின் விலை தற்போது தொடர்ந்து குறைந்து வருகின்றது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வரலாறு காணாத விலை
தமிழகத்தில் கடந்த வாரம் முதல் தக்காளியின் விலை மிக பெரிய உச்சத்தை எட்டியது. கிலோ ஒன்றிற்கு 200 ரூபாய்யை தக்காளியின் விலை எட்டியதால், சாமானிய மக்கள் பலரும் மிகவும் அவதியுற்றனர்.
அரசும் இந்த விலை உயர்வை குறைக்க பல முயற்சிகளை ஏற்படுத்தி வரும் நிலையில், சில நாட்களாக தக்காளியின் விலை குறைந்து வருகிறது.
குறையும் விலை
கடந்த சில தினங்களாக மளமளவென உயர்ந்த தக்காளி விலை இன்று அதிரடியாக 20 ரூபாய் குறைந்துள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று 120 ரூபாய்க்கு விற்பனையான தக்காளி விலை இன்று 20 ரூபாய் குறைந்து 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சில்லறை வணிகத்தில் சென்னை மற்றும் அதன் சுற்றவட்டார பகுதிகளில் 120 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.