கொஞ்சம் குறைஞ்சிருக்கு - சென்னை கோயம்பேட்டில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.10 குறைந்துள்ளது!
சென்னை கோயம்பேட்டில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.10 குறைந்துள்ளது!
விண்ணை முட்டும் தக்காளி விலை உயர்வு
அத்தியாவசிய பொருளான தக்காளியின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிரடியாக உயர்த்து வருகிறது. ஒரு கிலோ தக்காளி 200 ருபாய் வரையும் நெருங்கியிருந்த நிலையில், நடுத்தரவர்க மக்கள் பலரும் இதனால் அவதியுற்று வருகின்றனர்.
தினமும் சமையலில் அத்தியாவசிய பொருளான தக்காளி கடுமையாக விலையுயர்வை கட்டுப்படுத்த முடியாமல் அரசும் திணறி வருகிறது. குறைந்த விலைக்கு தமிழக அரசு தக்காளியை தற்போது ரேஷன் கடைகளில் விநியோகம் செய்து வருகிறது. நேற்று முதல் தமிழகமெங்கும் 500 கடைகளில் தக்காளியின் விநியோகம் நடைபெற்று வருகிறது.
கிலோவுக்கு ரூ.10 குறைவு
இந்நிலையில் நேற்று சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் கிலோ ரூ.160க்கு விற்கப்பட்ட தக்காளி இன்று ரூ.10 குறைந்து கிலோ ரூ.150க்கு விற்கப்படுகிறது. இரண்டாம் ரக தக்காளி கிலோவுக்கு ரூ.20 குறைந்து ரூ.130க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெளிமாநிலங்களிலிருந்து தக்காளி வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் வரும் நாட்களில் மேலும் தக்காளி விலை குறையும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.