தக்காளி விலை கிடு கிடு உயர்வு - ஒரு கிலோ ரூ.65க்கு விற்பனை

Price Increase Tomato
By Thahir Oct 10, 2021 09:44 AM GMT
Report

ஒரு கிலோ தக்காளி ரூ.30 ஆக விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ஒரு கிலோ தக்காளி ரூ.65 ஆக விற்கப்படுவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஒரு வாரமாகவே தமிழகம் முழுவதும் பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் தக்காளி செடிகள் சேதமடைந்துள்ளன.

தக்காளி விலை கிடு கிடு உயர்வு - ஒரு கிலோ ரூ.65க்கு விற்பனை | Tomato Price Increase

அதனால் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்ததால் தக்காளி விலை அதிகரித்துள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி ரூ.30 ஆக விற்பனை செய்யப்பட்டது.

தற்போது ஒரு கிலோ தக்காளி ரூ.65 ஆக விற்கப்படுகிறது. மேலும் கனமழை காரணாக, காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால் அனைத்து காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதாகவும், அவை மேலும் விலை உயர்வதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.