குறையும் தக்காளி விலை - இன்று எவ்வளவு தெரியுமா?
Tomato
Chennai
By Thahir
சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.10 குறைந்தது.
தக்காளி விலை குறைந்தது
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக தக்காளியின் விலை கடும் விலை உயர்வை சந்தித்து வந்தது. ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.200 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதையடுத்து தமிழக ரேசன் கடைகளில் தக்காளி விற்பனையை தொடங்கியது. இந்த நிலையில் இன்று கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை ரூ.10 குறைந்து ஒரு கிலோ ரூ.90க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று ரூ.100க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.90க்கு விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.