தக்காளி விலை கடும் உயர்வு - இன்று மாலை அமைச்சர் ஆலோசனை..!
தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் இன்று மாலை அமைச்சர் பெரியக்கருப்பன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
தக்காளி விலை கிடு கிடு உயர்வு
தக்காளி விலை ரூ.60-ஆக இருந்த நிலையில,தற்போது கிலோ ரூ.200 வரை விற்கப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் தக்காளி விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், தக்காளி விலையை கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழக அரசு நியாயவிலை கடைகளின் மூலம் தக்காளி விற்பனை செய்து வருகிறது.
அமைச்சர் இன்று ஆலோசனை
அதன்படி, ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு கிலோ தக்காளி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று மாலை தக்காளி விலையை கட்டுப்படுத்துவது தொடர்பாக அமைச்சர் பெரியகருப்பன் ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.
ஏற்கனவே கூட்டுறவுத்துறை மூலம் 302 நியாயவிலை அக்கடைகளில தக்காளி விற்பனை நடைபெற்று வரும் நிலையில், இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.