‘‘தக்காளின்னா சும்மா இல்லை பாஸ்’’ - திருமண நிகழ்ச்சியில் பரிசு பொருளான தக்காளி

கோவை மாவட்ட விஜய் மக்கள் இயக்க இளைஞரணி துணை தலைவராக இருப்பவர் மகேஷ்வரன். இவரது திருமண வரவேற்பு நிகழ்ச்சி கோவை குறிச்சி பிரிவு பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட விஜய் மக்கள் இயக்க மாவட்ட இளைஞரணி தலைவர் விஜய் யுவராஜ் மற்றும் நிர்வாகிகள் திடீரென மணமக்களுக்கு தக்காளி பரிசு வழங்கி ஆச்சரியப்படுத்தினர்.

இதில் மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள்,ராம்குமார், பிரியமுடன் உண்ணி பிரசன்னா, தளபதி மணிகண்டன், எட்டிமடை பாலு, ரமேஷ்குமார், சி.வி.எஸ் தினேஷ் விஜய் , வடவள்ளி பிரவீன், தளபதி ராம்ஸ், தனபால், கிரண், பாபுராஜ், சமத்துவம் ரவி, செல்வம்,கௌதம் உட்பட பலர் கலந்து கொண்டு மணமக்கள் மகேஷ்வரன்,ஸ்ருதி ஆகியோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

தற்போது விண்ணை தொடும்  தக்காளி விலையினால் இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது தக்காளி .

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்