என்ன ஸ்டண்ட் இது? ஒத்த வீடியோ மூலம் ரசிகர்களை அலறவிட்ட டாம் க்ரூஸ்
பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸின் மிஷன் இம்பாசிபிள் படத்திற்கான ஸ்டண்ட் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
டாம் க்ரூஸ் வீடியோ
பிரபல ஹாலிவுட் நடிகரான டாம் க்ரூஸ் நடித்து வெளியாகி பெரும் வரவேறபை பெறும். இந்த படம் மிஷ்ன் இம்பாசிபிள் 1996 தொடங்கி தற்போது வரை 6 பாகங்கள் இந்த படவரிசையில் வெளியாகியுள்ளது.
இந்த படங்களின் சிறப்பம்சமே இந்த படங்களில் இடம்பெறும் ஆக்ஷன் காட்சிகளை டாம் க்ரூஸ் சொந்தமாகவே செய்வதுதான்.
வைரலாகும் வீடியோ
கடந்த 2018ல் வெளியான ‘மிஷன் இம்பாசிபிள் ; ஃபால் அவுட்’ படத்தில் விமானத்திலிருந்து டைவ் அடித்து, வானத்தில் உண்மையாகவே ஒரு சண்டை காட்சியை டாம் க்ரூஸ் செய்திருந்தது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருந்தது.
So excited to share what we’ve been working on. #MissionImpossible pic.twitter.com/rIyiLzQdMG
— Tom Cruise (@TomCruise) December 19, 2022
ந்நிலையில் இந்த படத்தில் டாம் க்ரூஸ் மேற்கொண்ட சில ஸ்டண்ட் காட்சிகளை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
பைக்கில் மலைமீதிருந்து உண்மையாகவே டாம் க்ரூஸ் குதிக்கும் காட்சிகள் பலரையும் வாய் பிளக்க செய்துள்ளது. இதனால் படத்திற்கான எதிர்பார்ப்பு இப்போதே ரசிகர்களிடையே அதிகரிக்க தொடங்கியுள்ளது.