இந்திய வீரர்களை மிரட்டும் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்
INDvsENG
Tom Bess
By Petchi Avudaiappan
என்னுடைய முழு திறமையை இந்தியாவுக்கு எதிராக நடைபெற இருக்கும் டெஸ்ட் தொடரில் காண்பிக்க தயாராக உள்ளதாக இங்கிலாந்து வீரர் டாம் பெஸ் கூறியுள்ளார்.
இந்தாண்டு தொடக்கத்தில் இந்தியாவுக்கு இங்கிலாந்து அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் இரண்டு போட்டிகளில் விளையாடிய டாம் பெஸ் 5 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்தார்.
ஆனால் அதன்பின் நடைபெற்ற போட்டி தொடரில் 10 போட்டிகளில் ஆடி 23 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியுள்ளார்.
இதனிடையே இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாட ஆர்வமாக இருப்பதாகவும் தன்னுடைய முழு திறமையை காண்பிக்க போவதாகவும், டாம் பெஸ் எச்சரிக்கை விடுக்கும் வகையில் கூறியுள்ளார்.

Food recipe: உளுந்து சாதத்திற்கு எள்ளு துவையல்- இதுவரையில் யாரும் செய்யாத பக்குவத்தில் செய்ய தெரியுமா? Manithan
