சிம்புக்கு பதிலடியா? ட்விட்டரில் அசுரனாக மாறிய தனுஷ்
நடிகர் தனுஷ், தனது பயோவை ட்விட்டரில் அசுரன் நடிகர் என மாற்றியுள்ளார்.நடிகர் சிம்பு நடிப்பில் இந்த பொங்கலுக்கு ஈஸ்வரன் படம் வெளியானது. அந்தப் படத்தில், நீ அழிப்பதற்கு வந்த அசுரன்னா, நான் காக்குறதுக்கு வந்த ஈஸ்வரன் என்று சிம்பு பேசும் வசனம் பேசும் காட்சி இடம் பெற்றது. இந்த காட்சியைப் பார்த்த தனுஷ் ரசிகர்கள், அவரை வம்புக்கு இழுப்பதற்காக வேண்டுமென்றே இந்தக் காட்சி வைத்திருப்பதாக சமூக வலைதளங்களில் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்நிலையில் நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பயோவில் Asuran / Actor என்று மாற்றியுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும், சிம்புவின் அந்த வசனத்துக்கு பதிலடி தரும் விதமாக தான், தனது பயோவை மாற்றியிருக்கிறார் என்று சமூக வலைதளத்தில் தெரிவித்தனர். இதையடுத்து ட்விட்டரில், Asuran Dhanush என்ற ஹேஷ் டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது .