நாடு முழுவதும் இன்று முதல் சுங்க கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது..!

Price Increase Tamilnadu TollPlaza
By Thahir Apr 01, 2022 12:22 AM GMT
Report

நாடு முழுவதும் உள்ள சுங்க சாவடிகளில் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது.

தமிழகத்தில் உள்ள சுங்க சாவடிகளில் நள்ளிரவு முதல் ரூ.5 முதல் ரூ.120 வரை கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் தமிழக சுங்க சாவடிகளை கடந்த வாகனங்களில் உயர்த்தப்பட்ட கட்டணம் வசூலிக்கப்பட்டது.

இதனை அறியாத சில வாகன ஓட்டிகளில் சுங்க சாவடி ஊழியர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பெட்ரோல் டீசல் விலை உயர்வை தொடர்ந்து,

சரக்கு வாகனங்களுக்கான சுங்க கட்டணமும் அதிகரித்துள்ளதால், அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சுங்கக்கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று சரக்கு வாகனங்களின் உரிமையாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.