தமிழகத்தில் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு: நள்ளிரவில் அமுல்

By Fathima Mar 31, 2026 09:11 AM GMT
Report

தமிழ்நாட்டில் மொத்தம் 77 சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றன, இவற்றில் குறிப்பிட்ட சில சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1ம் தேதியும், மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1ம் தேதியும் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது.

இதன்படி நாளை முதல் திண்டிவனம், ஆத்தூர், கப்பலூர், விராலிமலை உட்பட 66 சுங்கச்சாவடிகளில் 5 சதவிகிதம் முதல் 7 சதவிகிதம் வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது, இதன்படி 10 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை கட்டணம் உயரலாம்.

தமிழகத்தில் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு: நள்ளிரவில் அமுல் | Toll Plaza Price Increase

கார்களுக்கான கட்டணம் ரூ.5 வரையும், கனரக வாகனங்களுக்கான கட்டணம் ரூ.40 வரையும் உயர வாய்ப்புள்ளது.

சென்னை- கன்னியாகுரி, திருச்சி- சேலம் மற்றும் சேலம்- கோயம்புத்தூர் உட்பட முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ளது 60 சுங்கச்சாவடிகள், மாநில நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள 8 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் இந்த கட்டண உயர்வு அமுலுக்கு வரவுள்ளது.

ஈரானில் போர் காரணமாக வணிக சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது, ஆட்டோ கியாஸ் பற்றாக்குறை, பெட்ரோல் விலை உயர்வு என தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும், இந்நிலையில் சுங்கச்சாவடி கட்டணமும் அதிகரிக்க பொருட்களின் விலை மேலும் உயரலாம் என தெரிகிறது.

தமிழகத்தில் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு: நள்ளிரவில் அமுல் | Toll Plaza Price Increase