டோக்கியோ பாராலிம்பிக் - இந்திய வீராங்கனை பவீனாவுக்கு வெள்ளி பதக்கம்
டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் இந்திய வீராங்கனை பவீனாவுக்கு வெள்ளி பதக்கம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன.
மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த போட்டிகளில் 162 நாடுகளை சேர்ந்த 4,403 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். முதல் நாளில் தொடக்க விழா மட்டுமே நடந்தது.
டோக்கியோ பாராலிம்பிக் போட்டியின் டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் பவீனா பட்டேல் அமர்ந்த நிலையில், ஜாய்ஸ் டி ஒலிவியராவுடன் விளையாடி காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.
இதனை தொடர்ந்து, காலிறுதி ஆட்டத்தில் செர்பிய வீராங்கனையை எதிர்த்து விளையாடிய இந்திய வீராங்கனை பவினா 11-5, 11-6, 11-7 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
இதன்பின் நடந்த அரையிறுதி போட்டியில் சீனாவின் மியாவோ ஜாங்குக்கு எதிராக விளையாடிய பவீனா பென் பட்டேல் 3-2 என்ற செட் கணக்கில் இறுதி போட்டிக்கு முன்னேறினார்.
இந்த நிலையில் இறுதி போட்டியில், சீன வீராங்கனையிடம் 0-3 என்ற புள்ளி கணக்கில் தோல்வியை தழுவினார்.
இதன் காரணமாக வீராங்கனை பவீனா வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.