ஒலிம்பிக் வீரர்களுக்கு வழங்கப்படும் 1.6 லட்சம் காண்டம்: 4 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்

Tokyo Olympics Aids awareness Condoms supply
By Petchi Avudaiappan Jul 19, 2021 11:12 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in விளையாட்டு
Report

 டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கு 1.6 லட்சம் காண்டங்கள் விநியோகிப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. மொத்தம் 206 நாடுகளைச் சேர்த்த 11,000 பேர் டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

மேலும் உலக அளவில் எய்ட்ஸ் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்களுக்கு 1988ஆம் ஆண்டுமுதல் காண்டம் கொடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்களுக்கு 1.6 லட்ச காண்டம், அதாவது ஒரு வீரருக்கு 54 காண்டம் கொடுக்க ஒலிம்பிக் கமிட்டி முடிவு செய்துள்ளது.

எப்போதும் வீரர்கள் மனஅழுத்தத்தை போக்க உடலுறவு வைத்துக்கொள்வார், இதற்காகவும் அந்த காண்டங்கள் பயன்படும் எனவும் கூறப்படுகிறது. ஆனால், இந்தாண்டு கொரோனா அச்சம் காரணமாக வீரர்கள் வெளிநபர்களைச் சந்திக்க கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வீரர்கள் நாடு திரும்பும்போது மட்டுமே விழிப்புணர்வுக்காகக் காண்டங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.