டோக்கியோ ஒலிம்பிக் - முதல் தங்கத்தை வென்றது சீனா!

china win tokyo olympic first gold
By Anupriyamkumaresan Jul 24, 2021 07:08 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in விளையாட்டு
Report

 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் முதல் தங்கப்பதக்கத்தை வென்று சீனா அசத்தியுள்ளது.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஒரு வழியாக 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று தொடங்கியது.

டோக்கியோ ஒலிம்பிக் - முதல் தங்கத்தை வென்றது சீனா! | Tokyo Olympic First Gold Win By China

இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்பட 205 நாடுகள் மற்றும் அகதிகள் அணி ஆகியவற்றை சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இந்த விளையாட்டு திருவிழாவில் பங்கேற்றுள்ளனர்.

2021- டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் முதல் தங்கப்பதக்கம் வென்று சீனா அசத்தியுள்ளது. மகளிர் 10 மீட்டர் ஏர்ரைபிள் துப்பாக்கிச்சுடுதலில் சீன வீராங்கனை யாங், தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் - முதல் தங்கத்தை வென்றது சீனா! | Tokyo Olympic First Gold Win By China

துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் ரஷ்யா 2-வது இடத்தையும் சுவிட்சர்லாந்து 3-வது இடத்தையும் பிடித்தன.