டோக்கன் கொடுத்து பணப்பட்டுவாடா செய்கிறார்கள்- புகார் அளிப்பேன் - கமல்ஹாசன் ஆவேசம்
தமிழகத்தில் இன்று காலை 7 மணியிலிருந்து சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கு சில தினங்கள் முன்பு, அரசியல் கட்சிகள் வாக்குக்கு பணம் கொடுக்கும் பணியை சைலண்டாக மேற்கொண்டு வந்தது. இதை கண்ட பறக்கும் படை அதிகாரிகள் சிலரை கையும் களவுமாக பிடித்து நடவடிக்கை எடுத்தார்கள்.
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, கூட்டணிக் கட்சியினர் பலர் பணப்பட்டுவாடா விவகாரத்தில் வசகமாக சிக்கினார்கள். இது குறித்து கமல்ஹாசன் பேசுகையில், கோவை தெற்கு தொகுதியில் டோக்கன் கொடுத்து பணப்பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது. பணப்பட்டுவாடா குறித்து நான் புகார் அளிக்க உள்ளேன். அதற்கான நகல் என்னிடம் உள்ளது என்றார்.

கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் தேர்தலில் களத்தில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜகவிலிருந்து வானதி சீனிவாசனும், காங்கிரஸில் இருந்து மயூரா ஜெயக்குமாரும் போட்டியிடுகிறார்கள்.
வானதி சீனிவாசனுக்கு கமல்ஹாசனுக்கும் இடையே இங்கு கடும் போட்டி நிலவு வருகிறது. இப்படி இருக்கும் சூழலில், பணப்பட்டுவாடா செய்து வாக்காளர்களை திசை திருப்புவதாக கமல்ஹாசன் குற்றம் சாட்டியிருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.