டோமினோஸ் விற்பனை நிலையத்தில் மாப் தொங்கிய விவகாரம் : ஐபிசி தமிழ்நாட்டிற்கு விளக்கம் கொடுத்த டோமினோஸ்
பெங்களூருவில் டோமினோஸ் விற்பனை நிலையத்தில் மாப் தொங்கிய விவகாரம் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து ஐபிசி தமிழ்நாட்டிற்கு டோமினோஸ் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
டோமினோஸ் விற்பனை நிலையத்தில் மாப் தொங்கிய விவகாரம்
பீட்சா என்ற துரித வகை உணவுகளை வாங்கி உண்போர் எண்ணிக்கை சற்று அதிகரித்து வருகிறது. ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தே பீட்சாக்களை ஆர்டர் செய்து உண்டு வருகின்றனர் பீட்சா பிரியர்கள்.
இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள ஒரு டோமினோஸ் விற்பனை நிலையத்தில் பீட்சா மாவுகள் வைக்கப்பட்டுள்ள தட்டுக்கு மேல் கழிவறைகளை சுத்தம் செய்யும் மாப்கள் தொங்கிக் கொண்டிருந்த புகைப்படம் மற்றும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலானது.
விளக்கம் கொடுத்த டோமினோஸ்
இதை பார்த்து அதிர்ச்சியான நெட்டிசன்கள் தயவு செய்து வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவை உண்ணுங்கள். மேலும் பீட்சா பிரியர்கள் சிலர் அந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில் டோமினோஸ் பீட்சா நிறுவனம் ஐபிசி தமிழ்நாட்டிற்கு விளக்கம் கொடுத்துள்ளது அதில் : வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிபடுத்த அனைத்தையும் நாங்கள் செய்கின்றோம் .
மேலும், சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பின் மிக உயர்ந்த தரத்தை உறுதி செய்வதலில் டோமினோஸ் உலகத் தரம் வாய்ந்த நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கிறது. சமீபத்தில் கடைகளில் ஒரு சம்பவம் எங்கள் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறோம்,
மேலும் இது குறித்து நாங்கள் கடுமையான நடவடிக்கையை எடுத்துள்ளோம் என ஐபிசி தமிழ் நாட்டிற்கு டோமினோஸ் விளக்கம் கொடுத்துள்ளது.