பட்ஜெட் எதிரொலி : அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை

Today Gold Price Budget 2023
By Irumporai Feb 01, 2023 09:11 AM GMT
Report

தங்கம், பிளான்டினத்திற்கு இணையாக வெள்ளி இறக்குமதிக்கும் கூடுதல் வரி விதிக்கப்படுவதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் 2023

அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெறும் நிலையில், அதற்கு முன்பு மோடிஅரசு தாக்கல் செய்யும் கடைசி பட்ஜெட் என்பதால் இதன் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், இந்தாண்டு மொத்தம் 9 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், மக்களைக் கவரும் வகையிலான பல திட்டங்கள் இதில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

பட்ஜெட் எதிரொலி : அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை | Todays Gold Silver Rate In Chennai Price

வரி அதிகரிப்பு

இந்த நிலையில் தங்கம் மற்றும் வெள்ளி வைர நகைகள் மீதான சுங்க வரியும் அதிகரிக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் கூறியுள்ளார்.

தங்கம் விலை அதிகரிப்பு 

இதனால் தங்கம் வெள்ளி விலை குறையுமா என்று எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் தங்கம், வைரம், வெள்ளி மீதான சுங்க வரி உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால் தங்கம் வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்துள்ளது 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 55ரூபாய் உயர்ந்து 5,415 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு 440 ரூபாய் உயர்ந்து43,320ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

இதேபோல வெள்ளி விலை கிராம் ரூ.76 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 76,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது