வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைந்தது
By Fathima
வங்கக் கடலில் நிலைபெற்றுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பில் வெளியான அறிவிப்பில், வங்கக் கடலில் நிலைபெற்றுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது.
இது அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இதன் காரணமாகத் தமிழகத்தில் நாளை காலைவரை மழை நீடிக்கும் வாய்ப்பு உள்ளது.
காற்று அதிகம் வீசும் என்பதால் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.