இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் அமைச்சர் விஜயபாஸ்கர்
இந்தியாவில் தற்போது அவசரக் கால நடவடிக்கையாக கோவிஷீல்ட் மற்றும் 'கோவாக்சின்' தடுப்பூசிகள் முதற்கட்டமாக செலுத்தபட்டு வருகிறது. ஆனாலும் இந்த தடுப்பூசியின் நம்பகத்தன்மை குறித்து அரசியல் கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் விமர்சனங்களை முன்வைத்தனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டின் சுகாதார மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று காலை 9 மணிக்கு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதாக தெரிவித்திருக்கிறார்.
அதன்படி இன்று சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.தடுப்பூசி செலுத்தும் முன்பு அமைச்சருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்த அமைச்சர் விஜயபாஸ்கர், ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இன்று காலை 9 மணிக்கு கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள இருப்பதாகவும் இதனால் சுகாதாரப் பணியாளர்களிடையே நம்பிக்கையை வளர்க்க, ஒரு மருத்துவராகவும் இந்திய மருத்துவ இதை செய்கிறேன் என குறிப்பிட்டுள்ள அமைச்சர்.
அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டு கொரோனா தொற்றிலிருந்து தற்காத்து கொள்ளுமாறு அமைச்சர் விஜய பாஸ்கர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் #MinisterVijayabaskar @CMOTamilNadu @OfficeOfOPS @mafoikprajan @Vijayabaskarofl pic.twitter.com/Qk9VQrdCXk
— Jayapaul Balu (@jayapaulbalu) January 22, 2021
I will be taking the #Covidvaccine shot at 9 am @gmcrgggh. I am doing this as a doctor & member of IMA, to instill confidence among Health Care Workers. I request all to get vaccinated and safeguard themselves from #COVID19. #COVIDVaccination @MoHFW_INDIA @CMOTamilNadu @TNDME1
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) January 22, 2021