இன்று முதல் சுங்கக்கட்டணம் உயர்வு : வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
தமிழகத்திலுள்ள 27 சுங்கச்சாவடிகளில் 10% முதல் 40 சதவீதம் வரை சுங்க கட்டணம் உயர்ந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாடு முழுவதும் இன்று சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்பதும் இதனால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்து உள்ளார்கள் என்பதும் தெரிந்ததே.இந்த நிலையில் தமிழகத்தில் மட்டும் 27 சுங்கச்சாவடிகளில் 40 சதவீதம் வரை சுங்கக் கட்டணம் உயர்ந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் இந்த கட்டணம் அமலுக்கு வந்துள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர் சுங்கக்கட்டணத்தை உடனடியாகக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகின்றன,
இதனிடையே தமிழகத்தில் 10 மீட்டருக்கு தொலைவில் சுங்க கட்டண சுவடிகள் இருப்பதாக நாடாளு மன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்பி திருமாவளவன் குற்றச்சாட்டு முன்வைத்த நிலையில், 60 கிலோ மீட்டர் தொலைவில் சுங்க சாவடிகள் அமைக்கப்பட வேண்டும் என்றும் அவ்வாறு இல்லாத சுங்கச்சாவடிகள் விரைவில் அகற்றப்படும் என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருந்தார்.
அந்த வகையில் தமிழகத்தில் 16 சுங்கச்சாவடிகள் அகற்றும் பணி இன்னும் தொடங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.