கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கு.. நாங்க அப்படி செய்ய மாட்டோம் -பதிலடி கொடுத்த உச்ச நீதிமன்றம்!
கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கை வெளி மாநிலத்துக்கு மாற்ற முடியாது.
கொல்கத்தா
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி- மருத்துவமனையில் கடந்த ஆகஸ்டு 9-ம் தேதி பெண் பயிற்சி மருத்துவர் சடலமாக மீட்கப்பட்டார். அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதுதொடர்பாக முக்கிய குற்றவாளியான சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார்.இந்த படுகொலை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தற்பொழுது இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி இவ்வழக்கின் நிலை அறிக்கையை சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
சுமார் 2 மாதங்களுக்கு மேலாக விசாரணை நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே.பி.பார்டிவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
கொலை வழக்கு
கடந்த 90 நாட்களாக நடத்தப்பட்ட விசாரணையில், மாநில காவல்துறையின் கருத்துகளையே பிரதிபலிப்பதைத் தவிர,சிபிஐ வேறொன்றும் செய்யவில்லை' என சஞ்சய் ராய் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதற்கு மற்றொரு வழக்கறிஞர் இந்த வழக்கின் விசாரணை இன்னும் சில தினங்களில் நடத்தப்பட உள்ளது.
இதனால் இந்த வழக்கு விசாரணையை மேற்குவங்க மாநிலத்திற்கு வெளியே நடத்தலாம் என்றார்.இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சந்திரசூட்ஒரு மாநிலத்தில் விசாரிக்கப்பட்டு வரும் வழக்கை, வெளி மாநிலத்துக்கு மாற்ற முடியும் .
சமீபத்தில் மணிப்பூர் சம்பந்தமான சில வழக்குகளும் அஸ்ஸாமுக்கு மாற்றப்பட்டன. ஆனால், இந்த வழக்கில் நாங்கள் அவ்வாறு செய்வதாக இல்லை. விசாரணையை நீதிமன்ற நீதிபதியின் முன்பே நடைபெற வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.