ஆடியோ விவகாரம் சர்ச்சை : இன்று அமைச்சரவை கூட்டம் - முக்கிய அமைச்சர்கள் மாற்றப்படுவார்களா?

M K Stalin DMK
By Irumporai May 02, 2023 02:48 AM GMT
Report

இன்று முதலமைச்ச்ர மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் கூடுகிறது .

முதலமைச்சர் ஸ்டாலின்

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் தமிழக அமைச்சரவையில் முக்கிய மாற்றம் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது, இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதால் மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்ப்படுகிறது.

ஆடியோ விவகாரம் சர்ச்சை : இன்று அமைச்சரவை கூட்டம் - முக்கிய அமைச்சர்கள் மாற்றப்படுவார்களா? | Today Thechairmanship Of Cm Stalin

  ஆடியோ விவகாரம்

ஏற்கனவே, பாஜக தலைவர் அண்ணாமலை , தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறி ஒரு ஆடியோவை வெளியிட்டு அது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதற்கு பழனிவேல் தியாகராஜன் மறுப்பும் தெரிவித்துவிட்டார். இந்த விவகாரத்தை அடுத்து 2 முறை முதல்வர் மு.க.ஸ்டாலினை அமைச்சர் சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. இன்று காலை 11 மணியளவில் தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் கூட உள்ளது.