இன்று மாலை சூரிய கிரகணம்; தமிழகத்தில் கோவில் நடை மூடல்

Tamil nadu Chennai
By Thahir Oct 25, 2022 03:49 AM GMT
Report

இன்று சூரிய கிரகணம் நிகழ்வு நடைபெற உள்ளதால் தமிழகத்தின் முக்கிய கோவில்களின் நடைகள் மூடப்படும் என கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று சூரிய கிரகணம் 

தீபாவளிக்கு மறுநாளான இன்று சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இந்தியாவின் சூரிய கிரகணம் இன்று மாலை 4.29 மணிக்கு தென்படும்.

மாலை 5.42 மணியளவில் இந்த கிரகணம் மறைந்துவிடும். மொத்தம் 1 மணி 45 நிமிடங்கள் சூரிய கிரகணம் தென்படும்.

மாலை 5.30 மணியளவில் முழு சூரிய கிரகணத்தை பார்க்க முடியும். சென்னையில் மாலை 5.13 மணியில் இருந்து மாலை 5.45 மணி வரை தென்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

today-solar-eclipse-temple-closed

சென்னை, கோவை, ஊட்டி, மற்றும் ஹைதராபாத், விசாகப்பட்டினம், பாட்னா, பெங்களூரு, திருவனந்தபுரம், மங்களூரு, கான்பூர், லக்னோ, நாக்பூர், வாரணாசி ஆகிய நகரங்களில் ஒரு மணி நேரத்துக்கும் குறைவாக சூரிய கிரகணம் தெரியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவில் நடை மூடல் 

இந்த சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்ககூடாது என்று அறிவியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். நாடு முழுவதும் கோளரங்களில் சூரிய கிரகணத்தை பார்ப்பதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சூரிய கிரகணம் நடைபெறுவதால் தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களின் நடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.