சரசரவென இறங்கிக் கொண்டே போகும் தங்கம் விலை - இன்றைய நிலவரம்!
தங்கம் விலை சவரனுக்கு ரூ. 160 குறைந்து விற்பனையாகிறது.
தங்கம் விலை
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம், இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று சரிந்துள்ளது.
சரிவு
அதன்படி, 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ. 5,510 ஆகவும், சவரன் ரூ.44,080 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.16 குறைந்து ரூ.4,514ஆகவும், சவரன் ரூ.36,112 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் வெள்ளி ரூ.79.00 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.79,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.