ஏறிக்கொண்டே போகும் தங்கம் விலை - எப்போது வாங்குவது? இன்றைய நிலவரம்

Today Gold Price
By Sumathi Sep 12, 2023 05:23 AM GMT
Report

தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து விற்பனையாகிறது.

தங்கம் விலை

சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

ஏறிக்கொண்டே போகும் தங்கம் விலை - எப்போது வாங்குவது? இன்றைய நிலவரம் | Today September 12 Gold And Silver Price

தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம், இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று விலை அதிகரித்துள்ளது.

உயர்வு

அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ. 5,520 ஆகவும், சவரனுக்கு ரூ.40 அதிகரித்து ரூ. 44,160 ரூபாயாக உள்ளது.

24 காரட் தங்கம் கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ரூ.5,990 ஆகவும், சவரன் 47,920 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் அதிகரித்து ரூ.78 ஆகவும், கிலோவுக்கு ரூ.500 உயர்ந்து ரூ.78,000 ஆக உள்ளது.