தொடர்ந்து சரியும் தங்க விலை - நகை வாங்க சரியான நேரம்!
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து விற்பனையாகிறது.
தங்கம் விலை
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம், இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று விலை குறைந்துள்ளது.
சரிவு
அதன்படி, 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ. 5,510 ஆக உள்ளது. சவரனுக்கு ரூ.160 சரிந்து ரூ. 44,080 ரூபாயாக உள்ளது.
24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 20 ரூபாய் சரிந்து ரூ.5,980 ஆகவும், சவ்ரன் 47,840 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.77 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி கிலோவுக்கு ரூ.500 சரிந்து ரூ.77,000 ஆக உள்ளது.
ஜூலை 14 முதல் அஸ்தமிக்கும் குரு பகவான் : இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போவது உறுதி! Manithan
அருங்காட்சியகத்திற்கு வழங்கப்படவுள்ள விடுதலைப் புலிகள் தலைவரின் நினைவுப் பரிசு! நீதிமன்றின் விசேட உத்தரவு IBC Tamil