நீண்ட நாட்களுக்குப் பின் குறைந்த தங்கம் விலை - இதுதான் சரியான நேரம்!
தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து விற்பனையாகிறது.
தங்கம் விலை
தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது.

அந்த வகையில் ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை திடீரென ரூ.46,000த்தை எட்டி அதிர்ச்சி கொடுத்தது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம், இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று விலை குறைந்துள்ளது.
குறைவு
அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து 5,545 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.44,360 ஆகவும் விற்பனையாகிறது.
18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.12 குறைந்து 4,542 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.96 குறைந்து ரூ.36,336 ஆகவும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1 குறைந்துரூ.79.00 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.79,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
ஜூலை 14 முதல் அஸ்தமிக்கும் குரு பகவான் : இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போவது உறுதி! Manithan
அருங்காட்சியகத்திற்கு வழங்கப்படவுள்ள விடுதலைப் புலிகள் தலைவரின் நினைவுப் பரிசு! நீதிமன்றின் விசேட உத்தரவு IBC Tamil