இப்படியே போனா எப்படி? எகிறிய தங்கம் விலை - கலக்கத்தில் நகைப்பிரியர்கள்!
தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து விற்பனையாகிறது.
தங்கம் விலை
தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது.

அந்த வகையில் ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை திடீரென ரூ.46,000த்தை எட்டி அதிர்ச்சி கொடுத்தது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம், இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று விலை அதிகரித்துள்ளது.
உயர்வு
அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 5,545 ரூபாய் ஆகவும், சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 44,360 ரூபாய் ஆகவும் விற்பனையாகிறது.
24 கேரட் சுத்த தங்கம், கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து, 6,015 ரூபாய்க்கும், சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து, 48,120 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து 80 ரூபாய் ஆகவும், ஒரு கிலோ வெள்ளி 80,000 ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இராணுவத்தினருக்கு ஓட்டுநர் பயிற்சி : எதிர்த்து நள்ளிரவு முதல் தொடருந்து சாரதிகள் வேலைநிறுத்தம் IBC Tamil
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan
யாழில் ஆலயம் செல்ல தனியாரின் காணிக்குள் பாதை அமைக்கும் இராணுவம் : காணி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு IBC Tamil