கனமழை எதிரொலி; தஞ்சை மாவட்ட பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை

Tamil nadu Government of Tamil Nadu
By Thahir Feb 03, 2023 01:45 AM GMT
Report

கனமழை காரணமாக தஞ்சை மாவட்ட பள்ளி, கல்லுாரிகளுக்கும், திருவாரூர் மற்றும் காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை 

தென்கிழக்கு வங்க கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதால் ராமநாதபுரம், வேதாரண்யம், திருச்சி, மயிலாடுதுறை, சிவகங்கை, தஞ்சாவூர்,கும்பகோணம்,மானாமதுரை,புதுக்கோட்டை, கொடைக்கானல், நத்தம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.

இந்த நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை 

இதன்படி தமிழ்நாட்டில் ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் மிக கனமழையும், குமரி, தென்காசி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

today-school-college-leave-due-to-heavy-rain

இந்த நிலையில், கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சை மாவட்ட பள்ளி, கல்லுாரிகளுக்கும், திருவாரூர் மாவட்டம் மற்றும் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.  

மேலும் நாகை மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக 8 ஆம் வகுப்பு வரை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.