இன்று ஒரே நாளில் 55 காவல்துறை அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம்

police day tamilnadu officer
By Jon Mar 25, 2021 02:04 PM GMT
Report

தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்றுக்கொண்டு 55 காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய காவல்துறை தலைவர் திரிபாதி உத்தரவிட்டிருக்கிறார். வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து, அரசு அதிகாரிகள் பலரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் காவல்துறை அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்வதற்கு தேர்தல் ஆணையம் தமிழ்நாடு காவல்துறைக்கு பரிந்துரைத்தது.

இதை ஏற்றுகொண்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள், உதவி ஆணையர்கள் உள்ளிட்ட 55 பேரை பணியிட மாற்றம் செய்வதற்கான அறிவிப்பை காவல்துறை தலைவர் திரிபாதி இன்று வெளியிட்டுள்ளார்.