பெட்ரோல் விலை - வாகன ஓட்டிகள் நிம்மதி!
சென்னையில் நேற்றைய பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர். மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் மாறிவிட்டன.
கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலையில் அதிரடி மாற்றம் ஏற்பட்டு வந்தது. அதிகரிக்கும் விலையால் பிற பொருள்களின் விலைவாசியும் உயரும் சூழல் உருவானது.
இந்நிலையில் சென்னையில் பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.101.37ஆக விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலையும் நேற்றைய விலையிலிருந்து மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.94.15 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது.
தினசரி பெட்ரோல் விலை அதிகரித்து வரும் நிலையில், இன்று பெட்ரோல் விலை மாற்றமடையாததால் வாகன ஓட்டிகள் சற்று
ஆறுதலடைந்துள்ளனர்.