இன்றைய பெட்ரோல், டீசல் விலை என்ன?

today rate petrol diesel
By Anupriyamkumaresan Jul 26, 2021 04:42 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in சமூகம்
Report

பெட்ரோல், டீசல் விலையில் தொடர்ந்து 10-வது நாளாக மாற்றமின்றி விற்பனையாகிறது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தினசரி அடிப்படையில் நிர்ணையித்து வருகின்றன.

கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே உள்ளது. இதனால், இந்தியாவில் வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.

இன்றைய பெட்ரோல், டீசல் விலை என்ன? | Today Petrol Diesel Rate

பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 100- ரூபாயைக் கடந்தும் தொடர்ந்து விலையேற்றத்தை சந்தித்து வருகிறது.

இந்த நிலையில், இன்று விலையில் எந்த மாற்றமுமின்றி பெட்ரோல், 102 ரூபாய் 49 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 39 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

தொடர்ந்து 10-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகிறது.